ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்வை முன்னிட்டு தமிழகக் கோயில்களில் பஜனை நடத்தவோ, சிறப்பு பூஜை, அன்னதானம் செய்யவோ தடை இல்லை எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
தனியார் வளாகங்களில் பிரான் பிரதிஷ்டையை நேரடியாக ஒளிபரப்ப எந்த தடையும் இல்லை என மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The Hon Madras High Court has ordered that there shall be no restrictions to telecast the Pran Pratishtha live on private premises.
The Supreme Court has ordered that based on oral orders, fundamental rights of individuals cannot be restricted by the State govt of TN.… pic.twitter.com/46SuXvQXCe
— K.Annamalai (@annamalai_k) January 22, 2024
வாய்மொழி உத்தரவுகளின் அடிப்படையில், தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகவான் ஸ்ரீ ராமரின் பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்வை எந்த ஒரு தனியார் வளாகத்திலும் LED திரையில் நேரடியாக ஒளிபரப்பலாம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கோவில்களுக்கு மட்டும் தகவல் கொடுக்கலாம்.
பஜனை நடத்தவோ, சிறப்பு பூஜை, அன்னதானம் செய்யவோ தடை இல்லை எனவும், யாரும் நம்மை தடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.