இரண்டாம் உலக போரில் பங்கேற்ற பெண்ணின் 102-வது பிறந்தநாளை ஏர்லைன்ஸ் கொண்டாடி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா பகுதியை சேர்ந்தவர் ஹெலன்மேரி ஹார்வத். இவர் இரண்டாம் உலக போரில் பங்கேற்றார்.
இரண்டாம் உலகப் போரின் வீரருக்கு மனமார்ந்த அஞ்சலி செலுத்தும் வகையில், ஹெலன் மேரி ஹோர்வத்தின் 102வது பிறந்தநாளைக் கொண்டாட சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் ஏற்பாடு செய்தது.
ஹெலன் மேரி ஹார்வத்தை விமானத்தில் அழைத்து வந்தனர். செயின்ட் லூயிசில் அவர் இறங்கியதும் ஹெலனை ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
பின்னர் அமெரிக்க கொடிகளை அசைத்து ஹெலனின் தலையில் கிரீடம் அணிவித்தனர். மேலும் ஏராளமானோர் ஆரவாரம் செய்து ஹெலனின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர்.