ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்த இரு அணிகளுக்கும் இடையே 1 டெஸ்ட் போட்டி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது.
அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் முழு நேர டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட தனஞ்சய டி சில்வாவின் பதவி இந்த தொடரிலிருந்து ஆரம்பமாக உள்ளது. இந்த அணியில் 3 பேர் அறிமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அணி :
தனஞ்சய டி சில்வா (கேப்டன்), குசல் மெண்டிஸ், திமுத் கருணாரத்னே, நிசன் மதுஷ்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், சதீரா சமரவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ், அசிதா பெர்னாண்டோ,விஷ்வா, பெர்னாண்டோ, கசுன் ரஜிதா, கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, லஹிரு உதாரா, சமிகா குனசேகரா, மிலன் ரத்னாயேக்.