இந்திய – பூடான் எல்லை அருகே, அசாமில் உள்ள தரங்கா பகுதியில், 103 தங்க பிஸ்கட்டுகளை கவுகாத்தி சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
அசாமின் தரங்கா உள்ள இந்திய – பூடான் எல்லை பகுதியில், தங்கம் கடத்தப்படுவதாக, அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து அப்பகுதியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்திற்கிடமான மூன்று பேரை, பிடித்து விசாரணை நடத்தினர்.
பின்னர், அவர்களை சோதனை நடத்தியதில், 103 தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதன் சர்வதேச மதிப்பு 1 கோடியே 32 இலட்ச ரூபாய் ஆகும். மேலும், 2.27 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணமும், 1.12 லட்சமும் அவர்களிடம் இருந்தது.
இதை அடுத்து, 2.60 கிலோ எடையுள்ள கடத்தல் தங்கத்தையும், பணத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.