37வது சூரஜ்குண்ட் சர்வதேச கைவினை கண்காட்சியை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தொடங்கி வைக்கிறார்.
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் 37வது சூரஜ்குண்ட் சர்வதேச கைவினை கண்காட்சியை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்த கண்காட்சியானது இந்தியாவின் கைவினைப்பொருட்கள், கைத்தறி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் செழுமையையும் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்துகிறது.
இந்த கண்காட்சியில் சுமார் 50 நாடுகள் பங்கேற்கும். இந்த நாடுகளில் இலங்கை, எத்தியோப்பியா, கானா, கென்யா, நமீபியா, நைஜீரியா, உகாண்டா, ஜிம்பாப்வே, மொரிஷியஸ், மியான்மர், நேபாளம் மற்றும் ரஷ்யா ஆகியவை பங்கேற்கிறது.
இந்த கண்காட்சி இந்த மாதம் 18 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த வருட கைவினை மேளாவில் பங்குதாரர் நாடாக தான்சானியா பங்கேற்றுள்ளது.
ஹரியானா மாநிலம் இப்பகுதியில் இருந்து பல்வேறு கலை வடிவங்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் மூலம் அதன் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது.
மேலும் இந்த கண்காட்சியை பார்வையாளர்கள் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பார்வையிடலாம்.
அதேபோல் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு நுழைவுச் சீட்டுகளில் 50 சதவீதம் தள்ளுபடியை சூரஜ்குண்ட் கண்காட்சி ஆணையம் வழங்கும்.