சென்னை அண்ணா நகரில் இயங்கி வரும் இரண்டு தனியார் பள்ளிகள் உட்பட 4 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அண்ணாநகர் பாரிமுனை கோபாலபுரம் ஆரியபுரத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டலை அடுத்து மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பள்ளிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பை கருதி வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.
இந்த நிலையில், மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்று காவல்துறையினர்
அறிவுறுத்தியிருக்கிறார்கள். மின்னஞ்சல் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.