சென்னையில் நாளை தமிழக – கர்நாடக அணிகளுக்கு இடையே நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியை இலவசமாக காணலாம்.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 89 வது பதிப்பு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் அணிகள் ‘எலைட்’, ‘பிளேட்’ என்று இரு பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எலைட் பிரிவில் உள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழகம் அணி கர்நாடக அணியுடன் பிப்ரவரி 9ஆம் தேதி விளையாடுகிறது. இந்த போட்டி சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்தப் போட்டியை ரசிகர் இலவசமாக அமர்ந்து பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போட்டியை நேரில் கான வரும் ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள C, D, E ஸ்டாண்ட் இருக்கைகளில் அமர்ந்து இலவசமாகப் போட்டியைக் காணலாம்.
மேலும் விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் உள்ள 4வது நுழைவாயில் வழியாகப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த இரண்டு அணிகளுக்கும் தாங்கள் விளையாடிய 5 போட்டியில் 3 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து குருப் சி பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது.