இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் காலமானார்!
Aug 19, 2025, 09:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் காலமானார்!

Web Desk by Web Desk
Feb 13, 2024, 04:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தத்தாஜிராவ் கெய்க்வாட் இன்று காலை பரோடாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவருக்கு வயது 95.

குஜராத் மாநிலம் பரோடாவில் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி பிறந்த இவர், 1952 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

கடந்த 1952ம் ஆண்டு தத்தாஜிராவ் கெய்க்வாட் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது முதல் டெஸ்டில் அறிமுகமானார். அதன்பிறகு, அவர் இந்தியாவுக்காக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஜூன் 5 ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். கடைசியாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1961 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி சென்னையில் விளையாடினார்.

கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டுகள் வரையில் தத்தாஜிராவ் கெய்க்வாட் வெறும் 11 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். இதில், மொத்தமாக 350 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு முறை மட்டுமே அரைசதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்துள்ளார்.

கடந்த 1953 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த தொடரில் அவர் சரிவர விளையாடாத நிலையில், விஜய் ஹசாரே போட்டிக்கு சென்றார்.

இந்திய அணியில் அறிமுகமான பிறகு, தத்தாஜிராவ் கெய்க்வாட் மோசமான பார்ம் காரணமாக சில காலம் அணியில் இருந்து வெளியேறினார்.

அதன்பிறகு, கடந்த 1959 ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தத்தாஜிராவ் மீண்டும் கேப்டனாக களமிறங்கி இந்திய அணியை வழிநடத்தினார்.

அப்போது, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 110 ரன்கள் மட்டுமே அடித்தார். இதன் காரணமாக, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 5-0 என்ற கணக்கில் வென்றது.

இந்தியாவின் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான தத்தாஜிராவ் கெய்க்வாட் ரஞ்சி டிராபியில் 14 சதங்கள் உள்பட 3,139 ரன்கள் குவித்து சாதனை படைத்திருக்கிறார்.

The BCCI expresses its profound grief at the passing away of Dattajirao Gaekwad, former India captain and India’s oldest Test cricketer. He played in 11 Tests and led the team during India’s Tour of England in 1959. Under his captaincy, Baroda also won the Ranji Trophy in the… pic.twitter.com/HSUArGrjDF

— BCCI (@BCCI) February 13, 2024

இந்த நிலையில் தான் தற்போது 95 வயதாகும் தத்தாஜிராவ் கெய்க்வாட், பரோடாவில் உள்ள அவரது இல்லத்தில் வயது முதிர்வின் காரணமாக சற்று முன் காலமானார்.

இது குறித்து, பிசிசிஐ எக்ஸ் பக்கத்தில், ” இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருமான தத்தாஜிராவ் கெய்க்வாட் மறைவிற்கு பிசிசிஐ இரங்கலை தெரிவித்துள்ளது.

1959 இல் இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது அணியை வழிநடத்தினார். அவரது தலைமையின் கீழ், பரோடா 1957-58 சீசனில் ரஞ்சி டிராபியையும் வென்றது. கெய்க்வாட்டின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார் தத்தாஜிராவ் கெய்க்வாட். இவருக்கு முன், தீபக் ஷோதன் இந்தியாவின் மிகவும் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இருந்தார்.

முன்னாள் பேட்ஸ்மேன் தீபக் ஷோதன் தனது 87வது வயதில் அகமதாபாத்தில் காலமானார். தற்போது தத்தாஜிராவ் கெய்க்வாட் தனது 95 வயதில் காலமாகியுள்ளார்.

Tags: The former captain of the Indian cricket team has passed away!BCCI
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகள் போராட்டம்: டெல்லி மெட்ரோவின் 8 நிலையங்களில் கேட்கள் மூடப்பட்டன!

Next Post

ஆமையை விட மெதுவாக பணிகள் நடத்துகிறது திமுக! – அண்ணாமலை

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies