அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ரயில் நிலைய சுரங்கப்பாதையில், இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 2 பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, துப்பாக்கிக் கலாச்சாரம் என்பது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. இதனால், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சுரங்கப்பாதையில், இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். பிராங்க்ஸில் உள்ள ரயில் நிலையத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, ரயில் நிலைய சுரங்கப்பாதையில், இளைஞர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். இதை பார்த்த ரயில் நிலைய பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓடினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், 2 பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் தப்பியோடினார்.
இதுகுறித்து ரயில் நிலைய பயணிகள் அந்நாட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் 34 வயதுடைய ஒரு ஆண் பயணி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.