சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
CBSE 10 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்றைய தினம், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு, மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய தினம், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு, மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவச் செல்வங்களை கல்விப் பயணத்தில், அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் நுழைவு வாயிலாக இந்தப் பொதுத் தேர்வுகள்…
— K.Annamalai (@annamalai_k) February 15, 2024
மாணவச் செல்வங்களை கல்விப் பயணத்தில், அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் நுழைவு வாயிலாக இந்தப் பொதுத் தேர்வுகள் இருக்கின்றன. உயர்கல்வியில் புதிய துறைகளும், அதிக வாய்ப்புகளும் உருவாகியுள்ள இந்த காலகட்டம், ஒவ்வொரு மாணவருக்கும் சிறப்பான எதிர்காலத்தை உறுதி செய்திருக்கிறது. அனைவரும் நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு சாதிக்க இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.