இந்தியா – இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சர்பராஸ் கான் 66 பந்துகளில் 69 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால் தற்போது இந்த போட்டி டை-யில் உள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று மூன்றாவது போட்டி சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
இதில் முதல் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட்கள் இழப்பிற்கு 326 ரன்களை எடுத்துள்ளது. இந்த போட்டியில் அறிமுக வீரராக சர்பராஸ் கான் களமிறங்கினார்.
இவர் இந்த போட்டியில் 9 பௌண்டரீஸ் 1 சிக்சர் என மொத்தமாக 66 பந்துகளில் 69 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இந்த டெஸ்ட் போட்டியில் 93 ஸ்ட்ரைக் ரேட் உடன் இருக்கிறார்.
அதேபோல் இவர் தனது அறிமுக போட்டியில் 48 பந்துகளில் அரைசதம் எடுத்துள்ளார். இதன் மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிகவேக அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
ஹர்திக் பாண்டிய இலங்கைக்கு எதிரான போட்டியில் 48 பந்துகளில் அரைசதம் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.