இந்தியா – இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்கள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர். அதேபோல் அறிமுக வீரர்களான சர்ப்ராஸ் கான் 62 ரன்களும், துருவ் ஜூரெல் 46 ரன்களும் எடுத்தனர்.
இதை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 319 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்களை எடுத்தார். இந்தியாவில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதை தொடர்ந்து இரண்டவாது இன்னிங்சில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 3 பௌண்டரீஸ் என 19 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 9 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்களுடன் 104 ரன்களை எடுத்து ரிடைர்ட் ஹுர்ட் மூலம் வெளியே சென்றார்.
இவரையடுத்து களமிறங்கிய ரஜத் படிதார் டக் அவுட் ஆனார். குலதீப் யாதவ் 3 ரன்களில் களத்தில் உள்ளார். அதேபோல் சுப்மன் கில் 6 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என 65 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளார்.
3ஆம் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. அதேபோல் இந்திய அணி 322 ரன்கள் முன்னிலையில் உள்ளது.