5-வது புரோ ஹாக்கி லீக் தொடர் 9 அணிகளுக்கு இடையே பல்வேறு நாடுகளில் நடைபெற்றுவருகிறது. இந்த தொடரின் இரண்டு சுற்று லீக் போட்டிகள் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஷ்வரில் வரும் 10ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது.
அதேபோல் ரூர்கேலாவில் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய அணிகளுடன் தலா 2 முறை விளையாடவுள்ளது.
இதில் இந்திய அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணி தனது நான்காவது லீக் போட்டியில் அயர்லாந்து அணியுடன் விளையாடியது. இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் இருந்தது.
அதேபோல் இரண்டாம் பாதியிலும் ஒரு கோல் கூட அடிக்காமல் இருந்தது. ஆனால் இந்திய அணி கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது. இதன் மூலம் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி பெற்றது. இந்திய அணி வீரர் குர்ஜந்த் சிங் 60-வது நிமிடத்தில் அந்த வெற்றிக்குரிய கோலை அடித்தார்.