பப்புவா நியூ கினியாவின் எங்கா மாகாணத்தில் இரு பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், 64 பேர் கொல்லப்பட்டனர்.
தீவு நாடான பப்புவா நியூகினியாவில், அதிகளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். எங்கா மாகாணத்தில் வசிக்கும் இரு பழங்குடியின மக்கள் இடையே நிலம் தொடர்பாக நீண்ட காலமாக மோதல் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், எங்கா மாகாணத்தில் வசிக்கும் இரு பழங்குடியினருக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
இரு தரப்பினரும் AK47 மற்றும் M4 போன்ற சக்தி வாய்ந்த துப்பாக்கிகளைக் கொண்டு சரமாரியாக சுட்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த மோதலில், 64 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் சாலைகளிலும், ஆற்றங்கரையிலும் கிடந்தன. மேலும், பலர் படுகாயம் அடைந்தனர்.