இந்த ஆண்டு நடைபெறவுள்ள 17 வது ஐபிஎல் தொடரில் இருந்தும் விராட் கோலி விலகலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதன் நான்காவது போட்டி கடந்த 23 ஆமாம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரையும் கைப்பற்றியது.
இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பங்கேற்கவில்லை. அவர் எதற்காக பங்கேற்கவில்லை என்பது குறித்த வதந்திகள் பரவின.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விராட் கோலி தன் மகன் பிறந்தது குறித்த அறிவிப்பை ரசிகர்களுக்காக வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள 17 வது ஐபிஎல் தொடரில் இருந்தும் விராட் கோலி விலகலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ” இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகியது போல, ஐ.பி.எல் 2024 தொடரிலும் விராட் கோலி விலகலாம். மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியவை கேப்டனாக நியமித்தது சரி. இதனால் ரோகித் எந்தவித பதற்றம் இன்றி விளையாடலாம்” என்று கூறினார்.
துருவ் குறித்து பேசும் போது, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஐ.பி.எல் தொடரில் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம் என்று கூறினார்.