உத்தர பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நடிகை தமன்னா சாமி தரிசனம் செய்தார்.
இந்துக்களின் முக்கியமான கோயிலாக கருதப்படும் வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும்.
சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயிலில் சில காலங்கள் சிவபெருமானை தங்கியிருந்ததாக நம்பபடுகிறது.
இந்நிலையில் உத்தர பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நடிகை தமன்னா சாமி தரிசனம் செய்தார்.
இதுதொடர்பான புகைப்படங்களை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுடன் “ஹர ஹர மகாதேவ்” என அவர் பதிவிட்டுள்ளார்.
தமன்னாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் ஹர ஹர மகாதேவ் என பதிவிட்டு வருகின்றனர். 1490ல் காசி விஸ்வநாதர் கோவில் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு சில அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர், சில காலம் பௌத்தர்களால் இந்நகரம் ஆளப்பட்டது.