கேள்வி கேட்ட மீனவர் ரமேஷை தாக்கிய திமுக குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! - அண்ணாமலை வலியுறுத்தல்
Sep 9, 2025, 07:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேள்வி கேட்ட மீனவர் ரமேஷை தாக்கிய திமுக குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! – அண்ணாமலை வலியுறுத்தல்

Web Desk by Web Desk
Mar 4, 2024, 02:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேள்வி கேட்ட மீனவர் மீது திமுக குண்டர்கள் தாக்குதல்  நடத்தியதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில்,

இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டு, பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள விசைப்படகு உரிமையாளர்களுக்கு, தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கடந்த 2022 ஆம் ஆண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற விழாவில், இழப்பீடாக வெறும் 2 லட்சத்திற்கான காசோலை மட்டுமே வழங்கியதால் மீனவப் பெருமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் பூம்புகாரைச் சேர்ந்த மீனவர் சகோதரர் ரமேஷ், விழா மேடையிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் இது குறித்துப் புகார் அளித்ததும், பின்னர், தனக்கு வழங்கப்பட்ட காசோலையை, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் மேடையிலேயே திருப்பிக் கொடுத்தததையும், விழா காணொளியில் காண முடிகிறது. இதனை அடுத்து, மீனவர், சகோதரர்  ரமேஷ் அவர்களை, அங்கேயிருந்த திமுகவினர் தாக்கியுள்ளதாகவும் இதனைப் பதிவு செய்த தனியார் செய்தித் தொலைக்காட்சியின் காணொளிகளும், திமுகவினரால் அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டு, பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள விசைப்படகு உரிமையாளர்களுக்கு, தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கடந்த 2022 ஆம் ஆண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற விழாவில், இழப்பீடாக வெறும் 2… pic.twitter.com/LA15Rd9iSo

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 4, 2024

மத்தியில், திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, தமிழக மீனவர்கள், இலங்கை அரசால் கொல்லப்படுவதைக் கண்டும் காணாமல் இருந்த திமுக, தற்போது, திமுக அரசு வழங்குவதாகக் கூறிய இழப்பீடுத் தொகையைக் குறைவாகக் கொடுத்ததைக் கேள்வி கேட்ட மீனவர் மீது தாக்குதலும் நடத்தியிருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தொடர்ந்து தமிழக மீனவ சமுதாய மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது திமுக. உடனடியாக, மீனவர் ரமேஷ் அவர்களைத் தாக்கிய திமுக குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீனவ சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கு வழங்குவதாக உறுதி அளித்த ரூ.5 லட்சம் இழப்பீடை வழங்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

Viksit Bharat 2047! லோக்சபா தேர்தல் 2024க்கு முன்னதாக பிரதமர் மோடியின் திட்டம் என்ன?

Next Post

சனாதன வழக்கு : அமைச்சர் உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies