கடந்த பிப்ரவரியில், “குழந்தைச் செல்வங்கள் மீட்பு” எனும் (RPF) ஆர்பிஎஃப் நடவடிக்கை மூலம் 521-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு குடும்பத்தினருடன் இணைத்து வைக்கப்பட்டனர் என்று இரயில்வே பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இரயில்வே சொத்து, பயணிகளுக்கான வசதிகள் மற்றும் பயணிகளின் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் ரயில்வே பாதுகாப்புப் படை உறுதியாக உள்ளது. இரயில்வே பாதுகாப்புப் படை பிப்ரவரி மாதத்தில், குழந்தை செல்வங்கள் மீட்பு எனும் நடவடிக்கை மூலம், பெற்றோர்களிடமிருந்து பிரிந்த குழந்தைகளை மீட்டதுடன், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் 521-க்கும் அதிகமான குழந்தைகளை அவர்களின் குடும்பங்களுடன் மீண்டும் இணைப்பதில் ஆர்பிஎஃப் முக்கியப் பங்கு வகித்தது.
ஓடும் ரயில்களில் இருந்து இறங்கும்போது அல்லது ஏறும்போது தற்செயலாக விழுந்த 205 பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.
“பெண்கள் பாதுகாப்பு” முன்முயற்சியின் கீழ், பிப்ரவரி மாதத்தில் 228 “பெண்கள் பாதுகாப்பு” குழுக்கள் 10,659 ரயில்களில் 2.73 லட்சம் பெண் பயணிகளுக்குப் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கின. பெண் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் பயணித்த 7,357 பேர் மீது ஆர்.பி.எஃப் சட்ட நடவடிக்கை எடுத்தது.
தரகர்களுக்கு எதிரான நடவடிக்கையில், பிப்ரவரி மாதத்தில் 413 பேர் ஆர்.பி.எஃப் கைது செய்து சட்டப்படி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தது. மேலும், ரூ.39.50 லட்சம் மதிப்புள்ள ரயில்வே டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை என்னும் பாராட்டத்தக்க முயற்சியாக, 2024 பிப்ரவரி மாதத்தில் 86 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்து, ரூ.3.41 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இக்குற்றவாளிகள் மேல் சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரமளிக்கப்பட்ட அரசு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ரயில் மதாத் போர்ட்டல் மற்றும் ஹெல்ப்லைன் மூலம் பெறப்பட்ட பாதுகாப்பு தொடர்பான பயணிகள் புகார்களை ஆர்.பி.எஃப் உடனடியாக நிவர்த்தி செய்தது. பிப்ரவரி 2024 மாதத்தில் 20,059 க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டன, அவற்றைத் தீர்க்க ஆர்.பி.எஃப் தேவையான நடவடிக்கைகளை எடுத்தது.
பிப்ரவரி 2024-ல், பயணிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 263 குற்றவாளிகளை ஆர்.பி.எஃப் கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பட்ட காவல்துறையிடம் ஒப்படைத்தது.
பிப்ரவரி 2024-ல் ஓடும் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட 41 பேரை ஆர்.பி.எஃப் கைது செய்தது.
மனிதாபிமான அணுகுமுறையுடன், பிப்ரவரி 2024 மாதத்தில் ரயில் பயணங்களின் போது 233 முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்த பயணிகளுக்கு ஆர்.பி.எஃப் உதவி வழங்கியது.
சட்டவிரோத சரக்கு போக்குவரத்தை கட்டுப்படுத்துதல் நடவடிக்கையின் கீழ் பிப்ரவரி மாதத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை ரூ.79.31 லட்சம் மதிப்புள்ள சட்டவிரோத புகையிலை பொருட்கள் மற்றும் சட்டவிரோத மதுபானங்களை பறிமுதல் செய்தது.
86 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் பின்னர் சம்பந்தப்பட்ட அரசின் சட்ட அமுலாக்க முகவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், கணக்கில் வராத ரூ.46.5 லட்சம் ரொக்கம், ரூ.1.59 கோடி மதிப்புள்ள தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
ரயில்வேயுடன் தொடர்பு கொள்ளும் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் பெண்கள் உட்பட வயது வந்தவர்கள் ஓடிப்போனவர்கள், கைவிடப்பட்டவர்கள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், ஆதரவற்றவர்கள், கடத்தப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள், கீழே விழுந்தவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் மீட்கப்படுகின்றனர். பிப்ரவரி மாதத்தில் இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த 231 பேர் மீட்கப்பட்டனர்.
பிப்ரவரி மாதத்தில் ரூ.5.69 கோடி மதிப்புள்ள உடைமைகளை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.
ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள், குறிப்பாக பெண் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள், ரயில் பயணங்களின் போது பிரசவத்திற்குச் செல்லும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவவும், ஆபரேஷன் மாத்ரிசக்தியின் கீழ் பிரசவத்திலும் உதவி செய்கிறார்கள். பிப்ரவரி 2024-ல், ரயில்வே பாதுகாப்புப் படையின் பெண் பணியாளர்கள் இதுபோன்ற 06 குழந்தை பிறப்புகளுக்கு உதவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.