இந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்ட் போட்டி முதல் நாள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களை எடுத்து 83 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் ஐந்தாவது போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கிய ஜாக் கிராலி 11 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 79 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அதேபோல் ஜானி பேர்ஸ்டோவ் 29 ரன்களும், பென் டக்கெட் 27 ரன்களும், ஜோ ரூட் 26 ரன்களும், பென் போக்ஸ் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி 218 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக குலதீப் யாதவ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். ரவீந்திர அஸ்வின் 4 விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதை தொடர்ந்து இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் களமிறங்கினர்.
இதில் ஜெய்ஸ்வால் 5 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 57 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதில் ரோகித் சர்மா 6 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என 52 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
அதேபோல் சுப்மன் கில் 26 ரங்களுடன் களத்தில் உள்ளார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களை எடுத்து 83 ரன்கள் பின்தங்கியுள்ளது.