மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் 14 வது போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் உ.பி. வாரியர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடியது.
இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 160 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
இதில் நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 45 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அமெலியா 39 ரன்களும், ஹர்மன் ப்ரீத் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். சஜீவன் சஜனா 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதேபோல் உ.பி. அணியில் அதிகபட்சமாக அதபத்து 2 விக்கெட்களும், தீப்தி, தாகூர், ராஜேஸ்வரி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதை தொடர்ந்து களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 118 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
உ.பி. அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 53 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மும்பை அணியில் அதிகபட்சமாக சாய்கா 3 விக்கெட்களை வீழ்த்தினார். நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனால் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் ஆட்டநாயகி விருது மும்பை அணியில் நாட் ஸ்கிவர்-ப்ரண்ட்டேவுக்கு வழங்கப்பட்டது.