தமிழகத்தை போதைப் பொருள் தலைநகராக மாற்றிய DRUG MAFIA திமுகவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், கொலை, பெண்களிடம் அத்துமீறும் சம்பவம் நடந்துவருகிறது. இதனால் தினமும் பல்வேறு குற்றச் சம்வங்கள் நடைபெறுகிறுது.
இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தும், திமுகவின் ஆட்சியில் தமிழகம் போதைப் பொருள் தலைநகராக மாற்றி உள்ளதாக குற்றம் சாட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தை போதைப் பொருள் தலைநகராக மாற்றிய DRUG MAFIA திமுகவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மார்ச் 12ஆம் தேதி மதியம் 3.30 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.