பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தாரி நாட்டின் 14வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரான ஆசிப் அலி சர்தாரி, அந்நாட்டின் 14ஆவது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் அதிபராக அவர் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வரலாற்றில் ஒருவர் 2ஆவது முறையாக ஜனாதிபதியாவது இதுவே முதல்முறை ஆகும்.
சர்தாரி பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) ஆகியவற்றின் கூட்டு வேட்பாளராகவும், அவரது போட்டியாளரான மஹ்மூத் கான் அச்சக்சாய் சன்னி இத்தேஹாத் கவுன்சிலின் வேட்பாளராகவும் இருந்தார்.
சர்தாரி 255 வாக்குகளைப் பெற்றார், அதே சமயம் தேசிய சட்டமன்றம் மற்றும் செனட்டில் அவரது எதிரி 119 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் பாகிஸ்தானின் 14-வது அதிபராக ஆசிப் அலி சர்தாரி பதவியேற்க இருக்கிறார். இதன் மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக 2-வது முறையாக ஆசிப் அலி சர்தாரி அதிபராக பதவியேற்க உள்ளார்.
ஏற்கனவே 2008 முதல் 2013 வரை அதிபராகப் பணியாற்றிய சர்தாரி, இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.