ஈரான் நாட்டின் தலைவராக உள்ள அயோத்துல்லா காமினியின், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடக கணக்குகளை மெட்டா நிறுவனம் நீக்கி உள்ளது.
ஈரான் நாட்டின் தலைவராக அயோத்துல்லா காமினி உள்ளார். இவரை சுமார் 50 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்பற்றுகின்றனர். இதேபோல், பேஸ்புக்கிலும் லட்சக்கணக்கானோர் அவரை பின்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அவருடைய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடக கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இவர் ஆபத்துக்குரிய அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் பற்றிய தன்னுடைய கொள்கையை தொடர்ந்து மீறி செயல்பட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி ஈரான் வெளியுறவு அமைச்சர் உசைன் ஆமிர்-அப்துல்லாஹியான் கூறியதாவது, இது பேச்சு சுதந்திர விதிமீறல் மட்டுமின்றி, அவருடைய பதவி மற்றும் செய்திகளுக்காக அவரை பின்பற்றும் லட்சக்கணக்கானோரை புண்படுத்தும் விஷயம் என்று கூறினார்.