மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ரஞ்சி கோப்பையை 42 முறையாக வென்றுள்ளது.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 89 வது பதிப்பு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. தற்போது இந்த போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்த தொடரின் இறுதிப்போட்டி கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் விதர்பா மற்றும் மும்பை அணிகள் விளையாடியது.
இதில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 224 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய விதர்பா அணி 105 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதை தொடர்நது 2வது இன்னிங்ஸ் தொடங்கியது.
இரண்டாவது இன்னிங்சில் மும்பை அணி 418 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக இளம் வீரர் முஷீர் கான் 136 ரன்களை எடுத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.
இதை தொடர்ந்து விதர்பா அணி களமிறங்கியது. விதர்பா அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அதர்வா 32 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய துருவ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய அமன் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கருண் நாயர் அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி ரன்களை குவித்து வந்தார்.
அப்போது அணியின் ஸ்கோர் 225/5 என்ற கணக்கில் இருந்தது. அதேபோல் விதர்பா அணியின் கேப்டன் அக்ஷய் சிறப்பாக விளையாடி 102 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இதை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் விதர்பா அணி 368 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
இதனால் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ரஞ்சி கோப்பையை 42 முறையாக வென்றுள்ளது.