தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் தமிழக பாஜக 25 சதவீத வாக்குகளைப் பெறும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரபல செய்தி நிறுவனத்திற்குத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். அதில், வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. ஒரு பக்கம் திமுக, மறுபக்கம் அதிமுக. இந்த இரண்டு கட்சிகளிலும் களத்தில் இறங்கி வேலை செய்ய ஆட்கள் உள்ளனர். அனைத்து விதத்திலும் பலமானவர்கள். அதற்கு சற்றும் குறையாமல் பாஜகவும் களத்தில் நிற்கும்.
தமிழகத்தில் இதுவரை ஒன்று திமுக அல்லது அதிமுக வெற்றி பெறும் என்ற நிலை தான் இருந்து வந்தது. முதல் முறையாக, இந்த முறை தமிழகத்தில் பாஜக பெறும் வாக்குகள் வரலாற்றுச் சாதனை படைக்கும். 18 முதல் 33 வயது இளைஞர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு சதவீதமாக உள்ளது. அவர்களின் சிந்தனைகளும் கொள்கைகளும் பாஜகவை ஒட்டியே உள்ளது.
ஆனால், இம்முறை மிக எளிதாக 25 சதவீதம் வாக்குகளைத் தமிழக பாஜக பெறும். அதில் எந்த மாற்றமும் இருக்காது. இதை நான் சவாலாகவே சொல்கிறேன் என்றார்.