சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக OMR சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் முன்மொழியப்பட்ட பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தரமணி மற்றும் துரைப்பாக்கம் மெட்ரோ இரயில் நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.
இதனால், இந்த பணிகளைக் கருத்தில் கொண்டு, OMR சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்ப்டடுள்து. இந்த மாற்றமானது மார்ச் 16 -ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.
அந்த வகையில், வேளச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் அப்பல்லோ சந்திப்பில் வலது புறம் திரும்பி துரைப்பாக்கம் நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக, வாகனங்கள் நேராக சென்று துர்யா ஹோட்டல் முன் “யு” டர்ன் செய்து துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூருக்கு செல்ல வேண்டும்.
அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் அப்பல்லோ சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வேளச்சேரி நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக, வாகனங்கள் நேராக சென்று உலக வர்த்தக மையத்தின் முன் “யு” டர்ன் செய்து அப்பல்லோ சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி வேளச்சேரியை அடையலாம்.
எனவே, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இந்த போக்குவரத்து மாற்றத்தை அறிந்து அதற்கு ஏற்ப தங்களது பயண திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டடுள்ளது.