டெல்லி ஜால் போர்டு முறைகேடு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கலால் கொள்கை முறைகேட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பது தொடர்பான குற்றச்சாட்டில், விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு 8 முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
ஆனால் விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராகததால் டெல்லி நீதிமன்றதில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. மார்ச் 16 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனைத்தொடர்ந்து நேற்று ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அவர் ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில் டெல்லி ஜால் போர்டு முறைகேடு தொடர்பான மற்றொரு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.