திமுகவினர்கள், பதவி வெறி, பண வெறி, அரசியல் வெறிப் பிடித்து சுத்துகிறார்கள் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
கோவையில் செய்தியாளரிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,
நாளை மறுநாள் சேலத்தில் பாஜக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஜனநாய நாட்டில், பிரதமர், முதல்வர் மக்களை சந்தித்தால் இந்த ஜனநாயகம் வலிமைபெறும். பிரதமர் மோடி இந்தியா முழுவதும் மக்களை சந்தித்து வருகிறார்.
நேற்றும் கூட ஐதராபாத்தில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடைபெற்றது. எனவே எல்லா இடங்களிலும் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடைபெறுகிறது. கோவையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோவை தடுப்பதற்கு அவர்கள் கூறிய நான்கு காரணங்கள் விசித்திரமாக உள்ளது. திமுக அரசின் தூண்டுதல் படி கோவை காவல்துறை நோட்டீஸ் கொடுத்தது. 5 மணி நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றம், அந்த நோட்டீஸை ரத்து செய்து, உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
நாளை மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி ரோடு ஷோவில் மக்களை சந்திக்ககிறார். கோயம்புத்தூா் மக்கள் அனைவரும் வந்து ஆசி வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார். கூட்டணிக் குறித்து விரைவில் வெளியிடப்படும். தமிழகத்தில் போதை பயன்பாடு அதிகரித்துள்ளது, குறிப்பாக, நகரத்தில் அதிகமா உள்ளது. குறிப்பாக திருப்பூரில் , போதை சாக்லேட், போதை ஊசி ஆகியவை அதிகளவில் கிடைப்பதாக பொது மக்கள் புகார் அளித்து வருகின்றனர். இது குறித்து பேசினால் முதல்வர் எங்கள் மீது வழக்கு போடுகிறார். பாஜக நிர்வாகிகள், போதை பொருளை ஒழிக்க 15 மணி நேரம் தினம் உழைக்கிறோம். போதை பொருள் குறித்து பேச வேண்டிய முதல்வர், பேசுகின்ற எங்கள் மீது வழக்கு போடுகிறார். இதில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. இது நாடாளுமன்ற 2024 தேர்தலில் பிரதிபலிக்கும் எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி, ஜனவரி 2-ம் தேதி திருச்சிக்கு வந்தார். அயோத்தி இராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக பிரதமர் மோடி18, 19 அகிய தினங்களில், இரமேஸ்வரம், திருச்சி கோயிலுக்கு சென்றார். இது குறித்து கடந்த வருடத்தில் சொல்லிருந்தேன். கடந்த ஆண்டு பிரதமர் மோடி தமிழகத்திற்கு 5 முறை வந்தார். அதுவும் தேர்தலுக்காக தான் வந்தாரா என கேள்வி எழுப்பினார்.
வீட்டை விட்டு வெளியேறாமல், வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து இருக்கும் முதல்வர். முதல்வர் ஸ்டாலின், ஜப்பான், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் அவர், இவ்வளவு நாள் ஏன் வெளியே வரவில்லை என அண்ணாமலை கேள்வி எழுப்பினார். தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திற்கும் பிரதமர் மோடி செல்லுகிறார். பிரதமர் மோடி 24 மணிநேரம் உழைக்கிறார். பிரதமர் வருகையால் தி.மு.க. கூட்டணியினர் தோல்வி பயத்தில் உள்ளனர்.
ஆளுநர் வருகை என்பது முறைப்படியாக தெரிவித்துவிட்டு தான் செல்லுகிறார். திமுகவினர் வெறிப்பிடித்து சுத்துகிறார்கள். இவர்களுக்கு பதவி வெறி, பண வெறி, அரசியல் வெறிப் பிடித்து சுத்துகிறார்கள். அனைவரும் தங்களுக்கு கீழ் தான் இருக்கனும், இவர்களை தாண்டி எதுவும் போக கூடாது என்று திமுகவினர் இருக்கிறார்கள். இவை அனைத்திற்கும் பதில் வருகின்ற 2024 தேர்தலில் தெரியும் எனத் தெரிவித்தார்.
பி.எம்ஸ்ரீ.. பள்ளியில் தமிழகம் இணைந்துள்ளது. இந்தியா முழுவதுமே புதிய கல்விக் கொள்கையை நோக்கி செல்லுகின்றனர். பி.எம்ஸ்ரீ.. பள்ளி திட்டத்திற்கு கையெழுத்து போடுவார்கள். ஆனால் புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என சொல்வது ஏற்கத்தக்கதல்ல. தேர்தல் முடிந்ததும் வேறு காரணம் சொல்லி ஏற்றுக்கொள்வர்.
ஆ. ராசா 2 ஜி வழக்கில் ஏப்ரல் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தீர்ப்பு வரலாம். தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் மோடி வருகை புரிய வேண்டும் என்பது எங்கள் விருப்பம். தேதி கொடுக்க பிரதமரும் தயாராக இருக்கிறார்.
இண்டிக் கூட்டணிக்கு எங்கேயும் எழுச்சி இல்லை. நாடு முழுவதும் ஜெய்ஸ்ரீராம் கோஷம்தான் எழுகிறது. இண்டி கூட்டணி நாட்டை விற்றார்கள் என அண்ணாமலை குற்றம்சாாட்டினார்.