பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டிரெஸ்ஸிங் அறைக்குள் பாகிஸ்தான் வீரர் இமாத் வாசிம் புகைபிடித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போன்று பல நாடுகளிலும் வெவ்வேறு பெயர்களில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் பாகிஸ்தானில் பி.எஸ்.எல் என்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் நடைபெற்று வருகிறது. அதன் 9வது சீசன் நேற்று நிறைவடைந்தது.
இதன் இறுதிப்போட்டியில் முல்தான் சுல்தான்ஸ், இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் மோதினர். இதில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது.
பின்னர் களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்ற இமாத் வாசிம் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
Imad bahi what is this behaviour
The reason behind 22-5#Imadwasim pic.twitter.com/GELQGIXeqe— Babar Azam's Army (@army_babar56) March 18, 2024
அதாவது முதல் இன்னிங்சில் பந்து வீசி 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இமாத் வாசிம் போட்டியின் 17வது ஓவர் முடிந்ததும் வீரர்களின் டிரெஸ்ஸிங் அறைக்கு சென்றார்.
அங்கு அவர் புகைபிடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.