இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் பவுலிங் செய்த போது வங்கதேச வீரர் முஷ்டாஃபிகுர் ரஹ்மானுக்கு காயம் ஏற்பட்டது.
நடக்க முடியாத அளவிற்கு கால்களில் பிடிப்பு ஏற்பட, அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து பிசியோ-க்கள் அழைத்து சென்றனர். இது தாங்க முடியாமல் முஷ்டாஃபிகுர் ரஹ்மான் மைதானத்திலேயே கதறினார். இதனால் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விளங்குவார் என ரசிகர்கள் கவலைப்பட்டனர்.
Excited and Looking forward to my new assignment. Heading to Chennai for IPL 2024. Keep me in your prayers so that I can deliver my best.#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/mMS56cp38T
— Mustafizur Rahman (@Mustafiz90) March 19, 2024
இந்நிலையில்ரசிகர்களின் கவலையை போக்கும் விதமாக முஸ்தாபிசுர் ரஹ்மான் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்தில், “உற்சாகமாகவும் எனது புதிய பணிக்காகவும் காத்திருக்கிறேன். ஐ.பி.எல் 2024-க்காக சென்னைக்குச் செல்கிறேன். உங்கள் பிரார்த்தனையில் என்னைக் காத்துக்கொள்ளுங்கள், அதனால் என்னால் முடிந்ததைச் செய்ய முடியும்” என பதிவிட்டுள்ளார்.