மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் 11 வயது சிறுமி கொலை செய்யப்பட்டார். இதனால், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே, கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு, மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது, அந்த 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதனால், சந்தேக மரணம் எனப் பதிவு செய்யப்பட்ட வழக்கு போக்சோ மற்றும் கொலை வழக்காக மாற்றப்படும் என்றும், குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் மதுரை மாநகரக் காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்தார்.
மதுரையில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.