உலகின் சிறந்த பால் நிறுவனங்களுள் ஒன்றாக இந்தியாவில் தயாரிக்கப்படும் அமுல் பால் நிறுவனம் உள்ளது. இந்த அமுல் பால் நிறுவனம் தற்போது சர்வதேச அளவில் ஏற்றுமதியை தொடங்கியுள்ளது.
அதன்படி அமுல் நிறுவனம் முதல் முறையாக வெளிநாட்டில் அதுவும் அமெரிக்காவில் பால் விற்பனையை விரிவாக்கம் செய்துள்ளது. அமெரிக்காவில் அமுல் பிராண்டின் பால் விற்பனைக்கு வரவுள்ளது.
அமுல் பிராண்டின் இந்த புதிய முயற்சியின் கீழ் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மற்றும் மத்திய மேற்கு சந்தைகளில் “பதப்படுத்தப்படாத பால்” விற்பனை செய்வதற்காக மிச்சிகன் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் (Michigan Milk Producers Association – MMPA) இணைந்துள்ளது.
இதுகுறித்து பேசிய குஜராத் கோ-ஆப்டரேட்டிவ் மில்க் மார்க்கெட்டிங் ஃபெடரேஷனின் மேலாண்மை இயக்குநர் ஜெயன் மேத்தா, ” அமுல் தனது பதப்படுத்தப்படாத பால் பொருட்களை அமெரிக்காவில் அறிமுகப்படுத்த இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறினார்.
மேலும் அவர், அமெரிக்காவில் 108 ஆண்டுகள் பழமையான பால் கூட்டுறவு நிறுவனமான மிச்சிகன் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் நாங்கள் இணைந்துள்ளோம். இந்த அறிவிப்பு மார்ச் 20 ஆம் தேதி மிச்சிகன் அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜெயன் மேத்தா தெரிவித்தார்.
அதேபோல் அமுல் பிராண்ட் முதல் முறையாக இந்தியாவிற்கு வெளியே தனது, பதப்படுத்தப்படாத பால் வகைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் அதிக அளவில் இந்திய வம்சாவளி மக்கள் வசிக்கும் சந்தையில் இது நிகழ்கிறது கூடுதல் மகிழ்ச்சி எனவும் ஜெயன் மேத்தா தெரிவித்தார்.
அமெரிக்காவில் அமுல் தனது பதப்படுத்தப்படாத பால் வகைகளை 3.8 லிட்டர் மற்றும் 1.9 லிட்டர் பேக்குகளில் அமுல் பிராண்ட் பெயரில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் 6 சதவீத கொழுப்பு சத்து கொண்ட அமுல் கோல்டு, 4.5 சதவீத கொழுப்பு சத்துடன் அமுல் சக்தி, 3 சதவீத கொழுப்பு சத்துடன் அமுல் டாசா மற்றும் 2 சதவீத கொழுப்பு சத்துடன் அமுல் ஸ்லிம் ஆகிய பால் வகைகள் உள்ளது.
முன்னதாக குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது GCMMF-ன் கீழ் உள்ள இந்திய பன்னாட்டு கூட்டுறவு சங்கமான அமுலின் வளர்ச்சியை பிரதமர் மோடி பாராட்டினார், இது இந்தியாவின் கால்நடை வளர்ப்பாளர்களின் வலிமையின் அடையாளமாக மாறியுள்ளது.
“அமுல் என்றால் நம்பிக்கை, வளர்ச்சி, பொதுமக்கள் பங்கேற்பு, விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல், காலத்திற்கு ஏற்றவகையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் என்று பொருள்” என்று பாராட்டினார்.
பாரத பிரதமரின் சொல்லுக்கேற்ப தற்போது நம் பாரதத்திற்கு பெருமை அளிக்கும் விதமாக இந்தியாவின் அமுல் நிறுவனம் தன் முதல் வெளிநாட்டு ஏற்றுமதியை தொடங்கியுள்ளது.
#WATCH | Anand, Gujarat: Month after Prime Minister Narendra Modi asked Amul to emerge as the world's largest dairy. Now, Amul plans to launch fresh milk products in the United States.
Gujarat Co-operative Milk Marketing Federation's Managing Director Jayen Mehta says, "I am… pic.twitter.com/jJYViW7Ane
— ANI (@ANI) March 23, 2024