உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா கடந்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. பாரதப் பிரதமர் மோடி பூஜைகள் செய்து குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார்.
மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியா முழுவதும் நாளை ஹோலி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இது அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டைக்கு பின்னர் வரும் முதல் ஹோலி பண்டிங்கை ஆகும்.
ஹோலி பண்டிங்கையை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவிலில் இன்று லட்சக்கணக்கான பக்த்தர்கள் சென்று குழந்தை ராமரை வழிபட்டனர். அதேபோல் பகவான் ஸ்ரீ ராமருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் – தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் பகவான் ஸ்ரீ ராமருக்கு சிறப்பு குலால் தயாரித்துள்ளது.
குலால் என்பது ஹோலி பண்டிகையின் போது கொண்டாட்டத்திற்காக பயன்படுத்தப்படும் வண்ண பொடியாகும். பகவான் ஸ்ரீ ராமருக்காக பூக்களிலிருந்து எடுத்து சிறப்பு வண்ண பொடிகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் டெல்லியில் உள்ள சந்தைகள் முழுவதும் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டது போல வண்ணமயமாக காட்சியளிக்கிறது.
வண்ண வண்ண பொடிகளும், தண்ணீர் அடிக்கும் துப்பாக்கிகளும் கடைசிவீதி முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் முகம் பதித்த பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.