வரும் 17-ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும், ஐபிஎல் போட்டியானது, ராமநவமி கொண்டாட்டத்தால் வேறு தேதி அல்லது வேறு இடத்திற்கு, மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2024-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உட்பட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டியை மாற்றுவதற்கான இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் ஒரு ஐபிஎல் போட்டிக்கான தேதியை மாற்றுவதற்கு, பரிசீலனை செய்துவருதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணமாக, ராமநவமி கொண்டாட்டமும், தேர்தல் தேதிகளும் கூறப்படுகின்றன.
ஏப்ரல் 17-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டியானது, ராமநவமி காரணமாக, தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.