அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம், எரிசக்தி துறையில் புதிய சாதனை படைத்துள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம், குஜராத்தில் உள்ள கவ்தா சோலார் பூங்காவில், சுமார் 2 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட புதிய சூரிய மின்சக்தி ஆற்றல் நிலையத்தை நிறுவியுள்ளது. இந்நிறுவனம், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில் புதிய மைல்கல்லை எட்டி உள்ளது.
இதன் மூலம், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், 10 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைத் தாண்டிய இந்தியாவின் முதல் நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனம், தற்போது 10 ஆயிரத்து 934 மெகாவாட் அளவிற்கு எரிசக்தி ஆற்றலை கொண்டுள்ளது. இதில், 7 ஆயிரத்து 393 மெகாவாட் சூரிய சக்தி ஆற்றல், ஆயிரத்து 401 மெகாவாட் காற்றாலை திறன் மற்றும் 2 ஆயிரத்து 140 மெகாவாட் காற்று-சூரிய கலப்பின திறன் ஆகியவை அடங்கும்.
இதன் மூலம், 5.8 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்கு ஆற்றலை வழங்கும். மேலும், ஆண்டுதோறும் சுமார் 21 மில்லியன் டன்கள் CO2 உமிழ்வைத் தவிர்ப்பதற்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிறுவனம், 2030-ஆம் ஆண்டளவில், 45 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை அடைய இலக்கு வைத்துள்ளது.