10 ஆண்டுகள் ஆண்ட பிறகும் மோடி தான் மீண்டும் பிரதமர் என உறுதியாக கூற முடியும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
வடசென்னை பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வடசென்னை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி,
மீண்டும் மோடி, வேண்டும் மோடி என நாடே கூறி வருகிறது. எங்கள் கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் மோடி என கூற முடியும். இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என சொல்ல முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார்.
நாட்டை சூறையாடுவது தான் இண்டி கூட்டணியின் எண்ணம். சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய போது தமிழகம் கொதித்து எழுந்தது. திமுக காங்கிரஸ் கூட்டணி ஜனநாயகத்தை பற்றி எப்படி பேச முடியும். கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.1.46 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளது.
10 ஆண்டுகள் ஆண்ட பிறகும் மோடி தான் மீண்டும் பிரதமர் என உறுதியாக கூற முடியும். குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால் தாமரை சின்னத்தில் பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும். நீங்கள் உங்கள் குடும்பத்திற்காக ஓட்டளியுங்கள். அவர்கள் குடும்பத்திற்காக அல்ல. நாட்டின் நன்மைக்கு பாஜகவுக்கு ஓட்டளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.