கஜகஸ்தான் சர்வதேச சேலஞ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா சக நாட்டவரான இஷாராணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்
கஜகஸ்தான் நாட்டிலுள்ள உரால்ஸ்க் நகரில் கஜகஸ்தான் சர்வதேச சேலஞ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வந்தது.
2015 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த இந்த பேட்மிண்டன் தொடரில் தற்போது ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியா நடப்பு சாம்பியனாக இருந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயா, சக நாட்டு வீராங்கனையான இஷாராணி பரூவாவுடன் விளையாடினார்.
இந்த போட்டியின் முதல் சுற்றில் அனுபமா உபாத்யாயா 21 புள்ளிகளை பெற்று 21-15 என்ற கணக்கில் இஷாராணியை வீழ்த்தினார்.
பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் அனுபமா உபாத்யாயா 21-16 என்ற செட் கணக்கில் இஷாராணியை வீழ்த்தினார்.
இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா சக நாட்டவரான இஷாராணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இது ஆண்டின் உத்தரகாண்டை சேர்ந்த 19 வயதான அனுபமாவின் 2-வது சர்வதேச பட்டம் இதுவாகும்.
பின்னர் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் தருண் மன்னிபாலி, மலேசியாவின் சோங் ஜோ வென்னுடன் விளையாடினார்.
இதன் முதல் சுற்றில் இந்திய வீரர் தருண் மன்னிபாலி 21-10 என்ற கணக்கில் மலேசியாவின் சோங் ஜோ வென்னை வீழ்த்தினார்.
பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் தருண் மன்னிபாலி 21-19 என்ற செட் கணக்கில் மலேசியாவின் சோங் ஜோ வென்னை வீழ்த்தினார்.
இதன் மூலம் இந்திய வீரர் தருண் மன்னிபாலி 2-0 என்ற கணக்கில் மலேசியாவின் சோங் ஜோ வென்னை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சஞ்சய் ஸ்ரீவத்சவா தன்ராஜ் – மனீஷா ஜோடி, மலேசியாவின் வோங் டின் சி-லிம் சிவ் சின் இணையுடன் விளையாடியது.
இதில் மலேசியாவின் வோங் டின் சி-லிம் சிவ் சின் இணை 9-21, 21-7,21-12 என்ற செட் கணக்கில் இந்தியாவின் சஞ்சய் ஸ்ரீவத்சவா தன்ராஜ் – மனீஷா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.