ஐஐடி பாம்பேவில் நடத்தபட்ட கலை நிகழ்ச்சியில் மாணவர்கள் குழு ‘கருத்து சுதந்திரம் மற்றும் படைப்பாற்றல்’ என்ற தலைப்பின் கீழ் பகவான் ஸ்ரீ ராமர் மற்றும் சீதா தேவியை அவமதிக்கும் வகையில் நாடகம் நடத்தினர்.
மும்பையில் உள்ள ஐஐடி பாம்பேவில் திறந்தவெளி திரையரங்கில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி அன்று கலை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
அந்த கலை நிகழ்ச்சியில் மாணவர்கள் குழு ‘கருத்து சுதந்திரம் மற்றும் படைப்பாற்றல்’ என்ற தலைப்பின் கீழ் பகவான் ஸ்ரீ ராமர் மற்றும் சீதா தேவியை அவமதிக்கும் வகையில் நாடகம் நடத்தினர்.
ராஹோவன் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த நாடகத்தில், ராமரைப் பற்றியும், இந்து மதத்தைப் பற்றியும் அவமரியாதையாகப் பேசினர். இந்த நாடகத்தின் சில வீடியோக்கள் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
ராமாயணத்தை மையமாக வைத்தது எடுத்ததாக கூறப்படும் இந்த நாடகத்தில், ராமர், சீதா தேவி மற்றும் லக்ஷ்மணன் ஆகியோர் மோசமான உரையாடல் மற்றும் நடிப்பை வெளிப்படுத்துவதாக சித்தரித்தனர்.
மேலும், இந்த நாடகம் இந்துக்களின் நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில் காண்பிக்கப்பட்டது. இதனால் ஐஐடி பம்பாய் மாணவர்கள் சிலர் இந்த சம்பவத்திற்கு எதிராக குரல் எழுப்பி நாடகத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் தற்போது வரை ஐஐடி பாம்பே நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. ஐஐடி பாம்பே தொடர்ந்து இந்துக்களுக்கு எதிரான செய்லகளை செய்து வருகிறது.