ஐபிஎல் தொடரின் 22 வது போட்டி சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்த தொடரின் 22-வது போட்டி சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடவுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 29 போட்டிகளில் விளையாடிவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 போட்டிகளிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 66 போட்டிகளில் விளையாடிவுள்ளது. இதில் சென்னை அணி 47 போட்டிகளில் வெற்றியும், 18 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றியும் 9 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
அதுபோல் இவ்விரு அணிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 50% வெற்றி பெறும் என்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 50% வெற்றி பெறும் என்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.