பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைசஸ் ஐதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்த தொடரின் 23-வது போட்டி பஞ்சாபில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த் சன் ரைசஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது.
ஆரம்பத்தில் சன் ரைசஸ் ஐதராபாத் அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்து கொண்டே வந்தது. 14வது ஓவரில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 100 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
அப்போது களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி அதிரடியாக விளையாடி 4 பௌண்டரியே சமற்றும் 5 சிக்சர்கள் என மொத்தமாக 64 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல் அப்துல் சமத் 25 ரன்களை எடுத்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 4 விக்கெட்களையும், அக்சர் படேல் மற்றும் சாம் கரண் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ரபாடா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதை தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி. பஞ்சாப் அணி தொடக்கத்திலேயே விக்கெட்களை இழந்து தடுமாறியது.
முதல் 5 ஓவர்களில் பேர்ஸ்டோ 0. ஷிகர் தவான் 14, பிரப்சிம்ரன் சிங் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். சாம் கரண் அணியைக் காக்கப் போராடி 22 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். சிக்கந்தர் ராசா 22 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.
அதன் பின் வந்த ஷஷான்க் சிங் அதிரடி ஆட்டத்தில் ஐதராபாத் அணியை திணற வைத்தார். ஆனால், பஞ்சாப் அணியின் வெற்றிக்கு தேவையான ரன்கள் அதிகம் இருந்ததால் ஐதராபாத் அணி நிம்மதியாக இருந்தது.
ஜிதேஷ் சர்மா 11 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பின் மற்றொரு அதிரடி பேட்ஸ்மேன் அசுதோஷ் சர்மா, ஷஷான்க் சிங் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவை என்ற நிலைக்கு போட்டியை கொண்டு வந்தனர்.
ஜெயதேவ் உனட்கட் வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தில் அசுதோஷ் சர்மா சிக்ஸ் அடித்தார். அடுத்து இரண்டு வைடுகள் வீசப்பட்டன. அடுத்து இரண்டாவது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார். அடுத்த இரண்டு பந்துகளில் 5 ரன்கள் கிடைத்தன.
கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு போட்டி சென்றது. அசுதோஷ் சர்மா பேட்டிங் நின்று இருந்தார். ஒரு சிக்ஸ், ஒரு பௌண்டரி அடித்தால் பஞ்சாப் வெற்றி பெற்றும் என்ற நிலை ஏற்பட்டது.
பின்னர் ஐந்தாவது பந்தில் அசுதோஷ் 1 ரன் மட்டுமே எடுத்தார். கடைசி பந்தில் ஷஷான்க் ஒரு சிக்ஸ் அடித்தார். இதை அடுத்து வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
மேலும் இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது சன் ரைசஸ் ஐதராபாத் அணியின் நிதிஷ் குமார் ரெட்டிக்கு வழங்கப்பட்டது.