வங்காள மாநிலத்தின் பாங்குரா மாவட்டத்தின் பெலியதோர் எனும் கிராமத்தில் 1887 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி பிறந்தவர் தான் ஜாமினிராய்.
இவர் தனது பதினாறு வயதில் கொல்கத்தா அரசு ஓவியக் கல்லூரியில் சேர்ந்து, கல்லூரி முதல்வரான அபநீந்திரநாத் தாகூரின் மாணவராகச் சேர்ந்து ஓவியக் கலையைப் பயின்றார்.
இவர் 1908 ஆம் ஆண்டு ஓவியத்தின் நுண் கலை பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் இந்தியாவின் முக்கியமான ஓவியர்களின் ஒருவராக உருவெடுத்தார்.
சுமார் 60 ஆண்டுகளாக தனது ஓவியக் கலையில் புகழ்பெற்று விளங்கிய ஜாமினி ராய், அரசு கலைப் பள்ளியில் பிரிட்டிஷ் ஸ்டைலில் ஓவியக் கலை பயின்றார்.
பல கலைஞர்களைபோல், இந்தியா தேசியவாத இயக்கத்தை கண்டபோது, ராயின் ஓவியங்கள் வித்தியாசமான கோணங்களில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
மேலும் இவர் ஓவிய படைப்புகளில் கிராமப்புற சூழல், சாதாரண மக்கள், விலங்குகள் மற்றும் நுண்கலைகளை முன்னிலைப்படுத்தியவர். இதனால் இந்திய ஓவிய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றார்.
இவர் 1954 ஆம் ஆண்டு தனது ஓவியத்திற்காக பத்ம விபூசன் விருது பெற்றார். மேலும் இவர் இந்திய நுண்கலையில் செல்வாக்கு மிக்கவராக கருதப்பட்டார். இவர் தனது 85-வது வயதில் 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி மறைந்தார்.