தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, நாட்டின் முக்கியத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் தமிழ் மக்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சகோதர சகோதரிகளுக்கு, இந்த மங்களகரமான தமிழ்ப்புத்தாண்டில் வாழ்த்துகள்.
இந்த புத்தாண்டு அனைவருக்கும் அந்தமில்லா மகிழ்ச்சியையும், அழிவிலா ஆரோக்கியத்தையும், செம்மையான செல்வத்தையும் அள்ளித்தரட்டும்.
உங்களுக்கும் , உங்கள் அன்பிற்கியவர்களுக்கும்,
இவ்வாண்டு மகிழ்வும் வளமும்…— Jagat Prakash Nadda (Modi Ka Parivar) (@JPNadda) April 14, 2024
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “தமிழக சகோதர சகோதரிகளுக்கு, இந்த மங்களகரமான தமிழ்ப்புத்தாண்டில் வாழ்த்துகள்.
இந்த புத்தாண்டு அனைவருக்கும் அந்தமில்லா மகிழ்ச்சியையும், அழிவிலா ஆரோக்கியத்தையும், செம்மையான செல்வத்தையும் அள்ளித்தரட்டும். உங்களுக்கும், உங்கள் அன்பிற்கியவர்களுக்கும், இவ்வாண்டு மகிழ்வும் வளமும் வளர்ந்தோங்க மீண்டும் எமது இதயம்கனிந்த வாழ்த்துகள்“ என்று பதிவிட்டுள்ளார்.