எண்ணூர் சுனாமி குடியிருப்பில் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் கள்ளத்தனமாக அரசு மதுபானங்களை விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் 101 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இந்த குற்ற சம்வத்தில் ஈடுபட்ட பெரிய குப்பம் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய தேசப்பன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த குற்ற சம்வத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள சுஜி என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.