அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஜனநாயக கடமையை ஆற்றினார்.
சென்னை அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் தேனி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் அமமுக வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலருமான டிடிவி தினகரன், தனது மனைவியுடன் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய டிடிவி தினகரன்,
தேர்தல் நடைமுறையில் திருப்தியில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பின், தேனி மக்களவை தொகுதி அமமுக கோட்டையாக மாறிவிட்டது.
100 சதவிகிதம் தமிழக மக்கள் தங்கள் ஜனநாயகக் கடைமையை ஆற்றினால் தான் மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது நாட்டுக்கு நல்லது. சென்னை போன்ற மாநகரங்களில் மக்கள் மோடிக்கு ஆதரவாக உள்ளார்கள்.
அதை வாக்குப்பதிவு மூலமே நிரூபிக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு மோடி பிரதமராக வருவதற்கு இது நல்ல வாய்ப்பு எனத் தெரிவித்தார்.