தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் தெலுங்கு மொழி பேசும் இனமக்கள் யுகாதி திருநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டியில் உள்ள கம்மவார் உறவின்முறை சார்பாக தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருநாளையொட்டி, பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து பாப்பம்மாள்புரம் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் சமய சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அப்போது கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் விழாவில் பங்கேற்றவர்களுக்கு யுகாதி விருந்து அளிக்கப்பட்டது.