விழுப்புரத்தில் திருநங்கைகளுக்காக நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகிப்போட்டியில் ஈரோட்டை சேர்ந்த ரியா என்பவர் பட்டம் வென்றார்.
கூவாகத்தில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழாவிற்காக விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி நடைபெற்றது. இதில்
தமிழகம் மட்டுமின்றி பெங்களூர், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த திருநங்கைகள் கலந்து கொண்டு வித வித ஆடைகள் அணிந்து தனித்திறைமைகளை வெளிபடுத்தினர்.
இந்த ஆண்டிற்கான மிஸ் கூவாகம் பட்டத்தை ஈரோட்டினை சார்ந்த உதவி மருத்துவரான ரியாவும், நேகா 2-ம் இடத்தையும், யுவான்ஜிலி ஜான் 3-ம் இடத்தையும் பெற்றனர்.
இதனைத்தொடர்ந்து வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.