தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்ற நால்வரை கைது செய்யப்பட்டனர்.
பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மொத்தமாக மதுபான பாட்டில்களை வாங்கி சிலர் கள்ளச்சந்தையில் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் கல்லூரணி, கீழப்பாவூர், மருதடியூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்திய போலீசார், கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்ற நால்வரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 310 மதுபான பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.