தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ஆயிரத்து 160 ரூபாய் குறைந்துள்ளதால் நகை வாங்க காத்திருப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பெருமளவில் குறைந்துள்ளது.
அதன்படி தங்கம் கிராமிற்கு 145 ரூபாய் குறைந்து, 6 ஆயிரத்து 700 ரூபாய்க்கும், சவரனுக்கு ஆயிரத்து 160 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் கிராமுக்கு 2 ரூபாய் 50 காசுகள் குறைந்து 86 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது.
அடுத்தடுத்து சுப வைபவங்கள் அதிகம் நடைபெறும் மாதங்கள் வருவதால் விலை குறைவால் சாமான்யர்கள் ஆறுதல் அடைந்தனர்.