தங்கம் நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, 6 ஆயிரத்து 730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் நகை வாங்குவோர் கலக்கம் அடைந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை நேற்றைய தினம் சற்றே குறைந்ததால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து, 6 ஆயிரத்து 730 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அந்த வகையில் ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் ஒரு கிராம் 86 ரூபாய் 50 காசுகளுக்கே விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மேலும் ஏறுமுகத்தை எட்டியுள்ளதால் நகை வாங்குவோர் கலக்கம் அடைந்துள்ளனர்.