ஷெங்கன் விசா என்றால் என்ன?
Mar 23, 2026, 08:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஷெங்கன் விசா என்றால் என்ன?

Murugesan M by Murugesan M
Apr 25, 2024, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீங்கள் ஒரு சுற்றுலா பிரியரா ? ஒரே விசாவில் நிறைய நாடுகளுக்கு சென்று வர ஆசை இருக்கிறதா ? அதுவும் உலக நாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா சென்று வருபவரா நீங்கள் ? உங்களுக்கான ஒரு குட் நியூஸ் தான் இது. ஷெங்கன் நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கான விசா நடைமுறைகளில் எளிமையான புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது ஐரோப்பிய யூனியன். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு…

ஒரே விசாவில் அதிக நாடுகளுக்குச் செல்லலாம் என்றால் அதுதான் ஷெங்கன் விசா. ஐரோப்பிய யூனியனில் உள்ள பல நாடுகளுக்கு செல்வதற்கான விசாவே ஷெங்கென் விசா எனப்படுகிறது.

ஆஸ்திரியா, பல்கேரியா, பெல்ஜியம்,செக் குடியரசு ,க்ரோஷியா, டென்மார்க், பின்லாந்து , பிரான்ஸ் , ஜெர்மனி ,கிரீஸ் ,ஹங்கேரி ,ஐஸ்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே , போலந்து , போர்ச்சுகல் , ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் ஸ்விட்சர்லாந்து 25க்கும் மேற்பட்ட நாடுகள் அடங்கிய பகுதியே ஷெங்கன் பகுதியாகும்.

ஐரோப்பிய யூனியனில் உள்ள இந்த நாடுகள் தங்களுக்கு இடையேயான எல்லைகளில் உள்ள சுங்க சாவடி நடைமுறைகள் மற்றும் விசா நடைமுறைகளை எளிதாக்க முயற்சிகள் எடுத்தன.

அதன் விளைவாக , 1990 ஆண்டு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது நடந்த இடம் லக்சம்பர்க் அருகே உள்ள ஷெங்கன் நகர் எனவே அந்த ஒப்பந்தம் ஷெங்கன் ஒப்பந்தம் எனப் படுகிறது. இந்த ஷெங்கன் ஒப்பந்தத்தின் படி மேற்குறிப்பிட்ட ஷெங்கன் பகுதிகளுக்கு சென்று வர ‘ஒரே விசா’ நடைமுறை படுத்தப்பட்டது . இதுவே ஷெங்கென் விசா !

இப்போது, இந்தியர்களுக்காக இந்த ஷெங்கன் விசா நடைமுறைகளை எளிதாக்கி இருக்கிறது ஐரோப்பிய யூனியன். இந்தியர்களுக்கான புதிய விசா விதிமுறைகள் அறிவிக்கப் பட்டுள்ளன. அடிக்கடி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள், இரண்டாண்டு அல்லது ஐந்தாண்டு கால அளவில், பலமுறை சென்று வர அனுமதிக்கும் மல்டிபிள் ஷெங்கன் என்ட்ரி விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, பல ஆண்டு ஷெங்கன் விசா பெற உங்கள் இந்திய பாஸ்போர்ட் செயற்பாட்டில் இருக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் இரண்டு ஷெங்கன் விசா, பெற்றுபயன் படுத்தி இருந்தால் , நீங்கள் இரண்டு வருட பல நுழைவு விசாவுக்காக விண்ணப்பிக்கலாம்.

இந்த இரண்டு வருட விசாவை நீங்கள் பயன்படுத்தினால் தொடர்ந்து உங்களுக்கு அடுத்து ஐந்தாண்டு விசா வழங்கப்படும். இந்த விசாவின் சிறப்பு என்னவென்றால் , அந்தந்த நாட்டு குடிமக்கள் போலவே நீங்களும் ஷெங்கன் பகுதிகளில் உரிமையுடன் சுற்றி திரியலாம்.

90 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை ஷெங்கன் பகுதியில் சென்று தங்குவதற்கு அனுமதியை இந்த ஷெங்கன் விசாஉங்களுக்கு தருகிறது.

ஆனால், ஷெங்கன் விசா பெற விண்ணப்பிக்கும் முறைகளில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டு செல்லுபடியாகும் இந்த புதிய விசா நடைமுறை இந்தியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது என்றே சொல்லலாம்.

Tags: What is Schengen Visa?
ShareTweetSendShare
Previous Post

வசமாகுமா அதிமுக? சசிகலாவின் கடித ரகசிய பின்னணி!

Next Post

பிரதமர் மோடிக்கு அமெரிக்க நிதி நிறுவனர் புகழாரம்!

Related News

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

பாலமேடு அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

இனியும் திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படக் கூடாது – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு!

திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் – பியூஷ் கோயல்

சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு!

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

நீரிழிவு நோய் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் கோயில் பங்குனி திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மேலூர் அருகே மீன்பிடி திருவிழா – கிராம மக்கள் பங்கேற்பு!

கன்னியாகுமரி கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies